×

புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு ‘சீல்’ ₹25 ஆயிரம் அபராதம்

அரக்கோணம், மார்ச் 12: அரக்கோணத்தில் உள்ள ஒரு சில கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வருவதாக பல்வேறு புகார்கள் எழுந்தது. இதையடுத்து, ராணிப்பேட்டை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் டவுன் போலீசார் பல்வேறு இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது, ஒரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதுதொடர்பாக டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட கடைக்கு நேற்று சீல் வைக்கப்பட்டது. மேலும், ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு ‘சீல்’ ₹25 ஆயிரம் அபராதம் appeared first on Dinakaran.

Tags : Arakkonam ,Ranipet District ,Food Safety Officer ,Ravichandran ,Dinakaran ,
× RELATED தலைமை ஆசிரியர்களுக்கு டிஇஓ பதவி...