28 நாள் அம்மன் பச்சை பட்டினிவிரதம்; சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா நாளை துவக்கம்

திருச்சி: சக்தி தலங்களில் பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பூச்சொரிதல் விழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான பூச்சொரிதல் விழா முதல் ஞாயிற்றுக்கிழமையான நாளை(9ம் தேதி) துவங்குகிறது. இதையொட்டி, அதிகாலை விக்னேஷ்வர பூஜை, புண்யாக வாசனம், அனுக்ஞை, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் முடிந்து காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் மீன லக்னத்தில் அம்மனுக்கு காப்பு கட்டப்படுகிறது. தொடர்ந்து பூச்சொரிதல் விழா நடக்கிறது.

மும்மூர்த்திகளை நோக்கி மாயசூரனை வதம் செய்த பாவம் நீங்கவும், உலக நன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எல்லாவிதமான நோய்களும், தீவினைகளும் அணுகாது, சகல சவுபாக்கியங்களும் கிடைக்க இங்கு அம்மனே பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பது சிறப்பாகும். மாசி மாத கடைசி ஞாயிறு முதல், பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை அம்மன் விரதம் இருப்பார். இந்த 28 நாட்களும் அம்மனுக்கு தளிகை, நைவேத்தியம் கிடையாது. துள்ளுமாவு, நீர்மோர், கரும்பு, பானகம் மற்றும் இளநீர் மட்டுமே நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.

The post 28 நாள் அம்மன் பச்சை பட்டினிவிரதம்; சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா நாளை துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: