காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் மதுரமங்கலம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி படப்பை குணா மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட படப்பை குணா, கடந்த 6 மாதங்களுக்கு முன் வெளியே வந்தார். சிறையில் இருந்து வெளியே வந்த படப்பை குணா, நிலத் தகராறில் மோகன் என்பவரை தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.