மதுரை, மார்ச் 5: மதுரையில் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தினமும் 1000 நபர்களுக்கு உணவு பொட்டலங்களை ஒரு வருடங்களாக நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளையின் நிறுவனர் குருசாமி வழங்கி வருகிறார். இதே போல் மதுரையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை செய்து வருகிறது.
வைகை ஆற்றில் ஆகாயத்தாமரைகளை அகற்றி படித்துறைகளை சுத்தம் செய்து சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், மதுரை யானைமலை ஒத்தக்கடையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று மாற்றுத்திறனாளிகளுக்கு மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக 200க்கும் மேற்பட்ட பார்வையற்றவர்கள் மற்றும் தவழும் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று மாதத்திற்கு தேவையான அரிசி மளிகை பொருட்கள் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளையில் நிறுவனர் குருசாமி கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு மளிகை பொருட்களையும், மதிய உணவினையும் வழங்கினார். முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் ஆகியோருக்கு பலதரப்பட்ட உதவிகளை தொடர்ந்து நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
The post நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மளிகை பொருட்கள் வழங்கல் appeared first on Dinakaran.
