புதுகை மாநகராட்சியோடு வாகவாசல் ஊராட்சி இணைப்பு

 

புதுக்கோட்டை, மார்ச் 4: புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நேற்று நடைபெற்றது.மாவட்ட கலெக்டர் அருணா தலைமை வகித்து மனுக்களை பெற்று உரிய அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அப்போது புதுக்கோட்டை மாவட்டம் வாகவாசல் ஊராட்சியில் இருந்து பொதுமக்கள் திரண்டு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வாகவாசல் ஊராட்சியை புதுக்கோட்டை மாநகராட்சியோடு இணைத்த காரணத்தால் எங்கள் ஊராட்சி மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறோம். எங்கள் ஊராட்சியை மாநகராட்சியோடு இணைத்து மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தினை நிறுத்தி விட்டார்கள். இதனால், ஏழை, எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். அதனால், எங்களது வாழ்வாதார பிரச்சினையான 100 நாள் வேலை திட்டத்தை தொடர்ந்து எங்களுக்கு வழங்கிடவும், எங்கள் ஊராட்சியை புதுக்கோட்டை மாநகராட்சியோடு இணைத்துள்ளதை மறுபரீசலனை செய்து ஊராட்சியை தொடர்ந்து செயல்படவும் உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்திருந்தனர்.

The post புதுகை மாநகராட்சியோடு வாகவாசல் ஊராட்சி இணைப்பு appeared first on Dinakaran.

Related Stories: