பொதுமக்கள் 2,000 ரூபாய் நோட்டுகளை தங்கள் வங்கி கணக்கில் செலுத்தவோ, வங்கிகளில் மாற்றி கொள்ளவோ செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டபோது, ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் மக்களிடையே புழக்கத்தில் இருந்தன. இந்நிலையில், 98.18 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பி விட்டதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும், ரூ.6,471 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே மக்களிடையே தற்போது புழக்கத்தில் உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
The post ரூ.2000நோட்டுகள் 98.18% வங்கிக்கு திரும்பி விட்டன: ரிசர்வ் வங்கி தகவல் appeared first on Dinakaran.
