நண்பரை வெட்டியவரின் கை முறிந்தது

 

தூத்துக்குடி, மார்ச் 1: தூத்துக்குடி தாளமுத்துநகர், மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் முகமது (26). பரோட்டா மாஸ்டரான இவர், கடந்த இரு தினங்களுக்கு முன்பு இரவு வேலை முடிந்து நண்பர்களுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களிடையே திடீரென தகராறு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பின்னர் நள்ளிரவில் 10 பேர் கொண்ட கும்பல், முகமது வீட்டுக்கு சென்று அவரை வெளியே அழைத்து சரமாரியாக வெட்டினர். இதில் அவருக்கு 14 இடங்களில் வெட்டு விழுந்துள்ளது. பலத்த காயமடைந்த அவர், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

The post நண்பரை வெட்டியவரின் கை முறிந்தது appeared first on Dinakaran.

Related Stories: