புதுக்கோட்டை, மார்ச் 1: புதுக்கோட்டையில் தமிழ்ச் சங்கம் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்ச் சங்கச் செயலாளர் கவிஞர் மகாசுந்தர் தலைமை வகித்தார். தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் தங்கம் மூர்த்தி தொடக்க உரை நிகழ்த்தினார். இன்றைய பட்டிமன்றங்களின் போக்கு’ எனும் தலைப்பில் உரையாற்றினார். தமிழ்ச் செம்மல் சந்திரன், ‘ இன்றைய திரைப்படங்களின் போக்கு’ எனும் தலைப்பில் உரையாற்றினார். விதைக்கலாம் மலையப்பன், பேராசிரியர்கள் உஷா நந்தினி, முனைவர் பூர்ணிமா, முனைவர் கலாவதி, செங்கை தீபிகா ஆகியோர் கவிதைகள் வாசித்தனர். எழுத்தாளர் ராஜநாராயணன் வரவேற்க, பேராசிரியர். கருப்பையா நன்றி கூறினார். துணைச் செயலாளர் கவிஞர் பீர் முகமது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதில் பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post கூட்டுறவு கூடுதல் பதிவாளர் வருகை புதுக்கோட்டை தமிழ்ச்சங்கம் சார்பில் கருத்தரங்கம் appeared first on Dinakaran.
