×

விடுமுறை கொண்டாட சுவிட்சர்லாந்து பறந்தார் தமன்னா

பெர்ன்: ரஜினிகாந்த் நடிப்பில், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் தமன்னா நடிக்கிறார். முதல் முறையாக அவர் ரஜினிகாந்த் படத்தில் நடிக்கிறார். இதனால் ஆவலுடன் இந்த படத்தை எதிர்பார்க்கிறார் தமன்னா.

மேலும் தமிழில் ‘அரண்மனை 4’ படத்திலும் இணைந்து நடித்து வருகிறார். இதேபோல ‘காத்து கருப்பு’, ‘ஏன் என்றால் காதல் என்பேன்’ படங்களில் நடிக்கிறார். தெலுங்கில் ‘தட் இஸ் மகாலட்சுமி’, ‘போலா சங்கர்’, இந்தியில் ‘போலே சூடியான்’ படத்திலும் அவர் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் பாலகிருஷ்ணாவின் படத்தில் ஒரு பாடலுக்கு ஆட இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

இப்படி தொடர்ந்து சினிமாவில் படு பிசியாக நடித்துவரும் தமன்னா தற்போது கோடை விடுமுறையை கொண்டாட, சுவிட்சர்லாந்து சென்றுள்ளார். அங்குள்ள இயற்கையை ரசித்ததோடு வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். இதில் வெள்ளைநிற பூவை ஊதி விளையாடும் நடிகை தமன்னாவை பார்த்த ரசிகர்கள் பலரும் ஸ்மைல் எமோஜிகளை பதிவிட்டு வாழ்த்தி வருகின்றனர்.

The post விடுமுறை கொண்டாட சுவிட்சர்லாந்து பறந்தார் தமன்னா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Tamannaah ,Switzerland ,Bern ,Rajinikanth ,Sun Pictures ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED எனக்கு இந்தப் பயிற்சி இல்லையே என்று –...