திமுக பொறுப்பாளருக்கு 100 கிலோ ஆப்பிள் மாலை

பென்னாகரம், பிப்.27: தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள தர்மச்செல்வனுக்கு, பென்னாகரம் பகுதியில் 100 கிலோ எடை கொண்ட ஆப்பிள் மாலை அணிவித்து நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள தர்மச்செல்வன், நேற்று பென்னாகரம் வந்தார். அப்போது, பி.அக்ரகாரம் பகுதியில் திரண்டிருந்த கட்சியினர், அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.
தொடர்ந்து, முன்னாள் மாவட்ட செயலாளர் பெரியண்ணன் நினைவிடத்தில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு, பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு வந்த தர்மச்செல்வனுக்கு, 100 கிலோ எடை கொண்ட ஆப்பிள் மாலை அணிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அரசு மருத்துவமனை அருகில் உள்ள அம்பேத்கர் சிலை மற்றும் பெரியார் சிலை, இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், கடை வீதியில் ஊர்வலமாக சென்று பொதுமக்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

The post திமுக பொறுப்பாளருக்கு 100 கிலோ ஆப்பிள் மாலை appeared first on Dinakaran.

Related Stories: