பள்ளியை தரம் உயர்த்த கோரிக்கை

 

தேனி, பிப். 26: தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாநில சிறுபான்மையினர் ஆணையக்குழு சார்பில் சிறுபான்மையினருடனான கலந்துரையாடல் கூட்டத்திற்கு சிறுபான்மையினர் ஆணைய உறப்பினர் செயலரும், சீர்மரபினர் நலத் துறை ஆணையருமான சம்பத் வந்திருந்தார். அவரை தேனி நகராட்சிக்குட்பட்ட கருவேல்நாயக்கன்பட்டியை சேர்ந்த ஊர்பொதுமக்கள் சார்பில் நகர்மன்ற கவுன்சிலர் கடவுள் தலைமையில் கருப்பசாமி, ரவீந்திரன், அழகேசன் ஆகியோர் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில், கருவேல்நாயக்கன்பட்டியில் சுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தொகை உள்ளது. இங்குள்ள அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளியில் இக்கிராம மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் 8ம் வகுப்பு வரை மட்டுமே உள்ளதால், 8ம் வகுப்புக்கு பிறகு, சுமார் 4 கிலோ மீட்டர் கடந்து தேனி நகருக்கு சென்று கல்வி பயில வேண்டியுள்ளது. எனவே, அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளியை அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என குறிப்பிடிருந்தனர்.

The post பள்ளியை தரம் உயர்த்த கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: