புதுக்கோட்டை, பிப்.26: பிரதோஷ விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்மாள் சமேத அரங்குல நாதர்கோயிலில் சுயம்புலிங்க சிவன் சன்னதியில் அமைந்துள்ள நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம் மஞ்சள் உள்ளிட்ட 11 வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று மலர் அலங்காரம் செய்யப்பட்டது.தொடர்ந்து சிவபெருமானை காளை வாகனத்தில் எழுந்தருள செய்து பக்தர்கள் சிவ சிவ, ஹர ஹர கோசத்துடன் மூன்று முறை கோயில் உட்பிரகாரத்தில் உலா நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நந்தி பகவானுக்கு மகா தீபம் கட்டப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
The post அரங்குல நாதர்கோயிலில் பிரதோஷ வழிபாடு appeared first on Dinakaran.
