ஓய்வு பெற்ற ஆசிரியர் நலச்சங்க கிளை கூட்டம்

 

காரைக்குடி, பிப். 25 காரைக்குடியில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்க கிளை கூட்டம் நடந்தது. மாவட்டத்தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் முத்துச்சாமி, மாவட்ட செயலாளர் முத்துச்சாமி, மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் சுசிலாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வட்டக் கிளையின் புதிய தலைவராக சிதம்பரம், செயலாளராக கிருஷ்ணன், பொருளாராக கலாவதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டத் துணைத் தலைவர் சண்முக வேல்முருகன், அருள், பேராசிரிய மரிய ரத்தினம், துணைச் செயலாளர் காத்தமுத்து ஆகியோர் உரையாற்றினர். இதில், மூத்த குடிமக்களுக்கு ரயில்கட்டணச் சலுகையை ஒன்றிய அரசு மீண்டும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி பேசினர்.

 

The post ஓய்வு பெற்ற ஆசிரியர் நலச்சங்க கிளை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: