மாவட்ட இறகுப்பந்து போட்டி மாணவ, மாணவிகள் உற்சாகம்

 

மதுரை, பிப். 25: மதுரையில் நடந்த மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டியில் மாணவ, மாணவிகள் உற்சாகமாக பங்கேற்றனர். மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மாவட்ட இறகுப்பந்து சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி 2 நாட்கள் நடந்தது. இதில் 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். வயது 9ல் துவங்கி 17 வயதுக்குட்பட்டோர் வரை ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளுக்கான போட்டிகள் நடந்தன.

இதன் துவக்க விழாவிற்கு மதுரை மாவட்ட இறகுப்பந்து சங்க செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். தலைவர் பாலசுப்பிரமணி, உதவி தலைவர் பிரபாகரன் முன்னிலை வகித்தனர். இறுதிப்போட்டியில் மாணவ, மாணவிகள் ஜெய்நிதின், ரிட்டி, வேதேஸ்வரா, லக்ஷன், அப்சனா, யோபா, கந்தவேல், விஷ்வேஷ், சுதன், ஹயகிரேவ், அருள், யாழினி, மகிதா, சச்சின், ஜெனோரீகன், தான்யா ஆகியோர் ெவற்றி பெற்றனர். இவர்களுக்கு கோப்பை மற்றும் பரிசுகளை உதவி தலைவர் மைக்கேல் சேட்லியர் வழங்கி பாராட்டினார்.

The post மாவட்ட இறகுப்பந்து போட்டி மாணவ, மாணவிகள் உற்சாகம் appeared first on Dinakaran.

Related Stories: