மினிபஸ் இயக்க விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

 

திண்டுக்கல், பிப். 24: திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் சரவணன் தெரிவித்ததாவது: தமிழகம் முழுவதும் புதிய வழித்தடங்களில் மினிபஸ் இயக்கத்தக்க வகையில் அரசினால் புதிய விரிவான திட்டம் வகுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட 33 புதிய வழித்தடங்களும், பழநி வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட 12 புதிய வழித்தடங்களும் என மொத்தம் 45 வழித்தடங்கள் கண்டறியப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டது.  இவ்வழித்தடங்களுக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி பிப்.28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post மினிபஸ் இயக்க விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Related Stories: