குத்தாலம்,பிப்.19: அடித்தட்டு மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற தமிழக முதல்வலர் 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் உழைக்கிறார் என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் ஏற்பாட்டில் இரண்டாம் மக்கள் குறைதீர்க்கும் முகாம் குத்தாலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கோமல், கொழையூர், மருத்தூர் ஆகிய மூன்று ஊராட்சிகள் நடந்தது.
கோமலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த முகாமிற்கு மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் தலைமை வகித்தார். குத்தாலம் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜா வரவேற்றார்.மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் சுதா, மயிலாடுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த முகாமை பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் மெயநாதன் தொடங்கி வைத்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
The post அடித்தட்டு மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற தமிழக முதல்வர் 20 மணி நேரம் உழைக்கிறார் appeared first on Dinakaran.
