பின்னர் களம் இறங்கிய டெல்லி அணியில் ஷபாலி வர்மா 18 பந்தில் 43 ரன் விளாசினார். நிகி பிரசாத் 35,சாரா பிரைஸ் 21 ரன் எடுத்தனர். கடைசி ஓவரில் 10 ரன் தேவைப்பட்ட நிலையில், முதல் 4 பந்தில் 8 ரன் எடுக்க 5வது பந்தில் நிகி பிரசாத் அவுட் ஆனார். இதனால் கடைசி பந்தில் 2 ரன் தேவைப்பட பரபரப்பானது. அந்த பந்தில் அருந்ததி ரெட்டி 2ரன் எடுத்தார். 20ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 165 ரன் எடுத்த டெல்லி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. நிகி பிரசாத் ஆட்டநாயகி விருது பெற்றார். இன்று இரவு 7.30 மணிக்கு குஜராத் ஜெயன்ட்ஸ்-உ.பி.வாரியர்ஸ் மோதுகின்றன. முதல் போட்டியில் ஆர்சிபியிடம் தோல்வி அடைந்த குஜராத் இன்று வெற்றிகணக்கை தொடங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
The post மகளிர் ஐபிஎல் தொடரில் குஜராத்-உ.பி.வாரியர்ஸ் இன்று மோதல் appeared first on Dinakaran.
