ஓய்வூதியர் தின விழா

 

தேவகோட்டை, பிப். 16: தேவகோட்டை ராம்நகர் புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் நல சங்கம் தேவகோட்டை வட்டார கிளை சார்பாக ஒய்வூதியர் தின விழா கொண்டாடப்பட்டது. வட்டார தலைவர் ஜான் பிரிட்டோ தலைமை வகித்தார். மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பெரியசாமி முன்னிலை வகித்தார். வட்டார செயலாளர் வடிவேலு வரவேற்றார். பள்ளி தாளாளர் ஆரோக்கியசாமி பேசினார். மாவட்டத் தலைவர் ராமசாமி, மாவட்ட செயலாளர் முத்துச்சாமி சிறப்புரை ஆற்றினர். மாநில பொதுக்குழு உறுப்பினர் சுசிலா தேவி, ஆசிரியர் சுவாமிநாதன், லயன்ஸ் கிளப் செல்லையா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட இணைச்செயலாளர் சகாயம் ஜோசப் சேவியர் நன்றி கூறினார்.

 

The post ஓய்வூதியர் தின விழா appeared first on Dinakaran.

Related Stories: