திண்டுக்கல், பிப். 15: திண்டுக்கல்லில் மாவட்ட சுகாதார அலுவலகம் முன்பு தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் முனியப்பன் தலைமை வகித்தார். முன்னாள் மாநில தலைவர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். முன்னாள் மாநில இடை செயலாளர் சந்திரமோகன், முன்னாள் மாவட்ட செயலாளர் முருகன் கோரிக்கை விளக்க உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் நிலை 2 பணியிடங்களை நிரப்ப வேண்டும். காலி பணியிடங்களில் தொகுப்பு ஊதியத்தில் பணிபுரிந்து வரும் சுகாதார ஆய்வாளர்களுக்கு முன்னுரிமை அளித்து நிரப்ப வேண்டும். மக்கள்தொகை அடிப்படையில் 5000 பேருக்கு ஒரு சுகாதார ஆய்வாளர் என்ற முறையில் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் 50க்கும் மேற்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்
The post திண்டுக்கல்லில் சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.
