பைக் மீது லாரி மோதி கணவன் கண் முன் மனைவி உயிரிழப்பு


சென்னை: மாதவரம் 200 அடி சாலை மேம்பாலத்தின் அருகே சென்றபோது, பின்னால் வேகமாக வந்த கன்டெய்னர் லாரி இவர்கள் மீது மோதியதில், இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது, லாரியின் பின் சக்கரம் கோட்டீஸ்வரி மீது ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். திருமலையா முகத்தில் காயங்களுடன் உயிர் தப்பினார். தனது கண் முன்னே மனைவி கோட்டீஸ்வரி ரத்த வெள்ளத்தில் துடி துடித்து இறந்ததை பார்த்து கதறி அழுதார். அருகில் இருந்த போக்குவரத்து போலீசார், திருமலையாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்து வந்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் சுகிலா மற்றும் போலீசார், கோட்டீஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூரை சேர்ந்த லாரி டிரைவர் முருகனை (44) கைது செய்தனர்.

The post பைக் மீது லாரி மோதி கணவன் கண் முன் மனைவி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: