காஞ்சிபுரம்: சர்வதேச கிக்பாக்ஸிங் போட்டியில் காஞ்சி வீரர், வீராங்கனைகள் 17 பதக்கங்கள் வென்றனர். சர்வதேச அளவிலான கிக்பாக்ஸிங் போட்டி புதுடெல்லியில் பிப்.1ம் முதல் 5ம் தேதி வரை நடந்தது. இதில், இந்தியா, இங்கிலாந்து, கஜகஸ்தான், பின்லாந்து, உஸ்பெகிஸ்தான், நேபாளம், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து 10க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. இதில், காஞ்சிபுரம் சேர்ந்த 9 வீரர் வீராங்கனையர் இந்திய அணியில் இடம் பிடித்தனர்.
இதில், நீனா (21) ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கமும், சுகாஸ் (14), நித்தீஷ் (11), ரோஷினி (21) ஆகியோர் தலா ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கமும் வென்றனர். இதோபோல், வசீம் ரபிக் (17) இரு தங்க பதக்கமும், பேன் பிரைசன் (16) ஒரு தங்க பதக்கமும், ஷர்மா (14) ஒரு தங்கம், ஒரு வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர். தர்ஷன் (16) ஒரு வெள்ளி பதக்கமும், நிகாத்ரி (13), இரு வெள்ளி பதக்கமும் என, 8 தங்கம், 7 வெள்ளி, 2 வெண்கலம் என, மொத்தம் 17 பதக்கங்கள் வென்று காஞ்சிபுரம் மாவட்டத்திற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
The post சர்வதேச கிக்பாக்ஸிங் போட்டி: காஞ்சி வீரர்களுக்கு 17 பதக்கங்கள் appeared first on Dinakaran.