70 வயது நிரம்பிய ஓய்வூதியதாரர்களுக்கு 10% பென்ஷன் வழங்க வேண்டும்: சங்க அமைப்பு தின விழாவில் தீர்மானம்


காஞ்சிபுரம்: தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க விழாவில், ‘70 வயது நிரம்பிய ஓய்வூதியதாரர்களுக்கு 10 சதவீத பென்ஷன் வழங்க வேண்டும்’ என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் காஞ்சிபுரம் வட்டக்கிளை சார்பில், 26வது சங்க அமைப்பு தின விழா நேற்று சங்க அலுவலக கட்டிடத்தில் நடந்தது. காஞ்சிபுரம் வட்டக்கிளை தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் முத்து வரவேற்றார். இதில், காஞ்சி வட்டக்கிளை பொருளாளர் கந்தசாமி கலந்துகொண்டு, 26வது சங்க அமைப்பு தின விழாவை தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக ஆதிதிராவிட நலத்துறை ஆசிரியர் காப்பாளர் சங்கம் முன்னாள் மாநிலத் தலைவர் ராஜேந்திரன், மாநில பொருளாளரும், காஞ்சி மாவட்ட பொறுப்பாளருமான திருவேங்கடம் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

இதில் பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 70 வயதில் நிரம்பிய ஓய்வூதியர்களுக்கு 10% பென்ஷன் உயர்வு வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் கிராம உதவியாளர்களுக்கு நியாயமான ஓய்வூதியம் வழங்க வேண்டும். தேர்தல் கால வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்றிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, சங்க கொடியேற்றி வைக்கப்பட்டது. முடிவில் வட்ட இணை செயலாளர் கோபால் நன்றி கூறினார். இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் சவுதா மணி சத்தியசீலன், மாவட்ட துணை தலைவர் தணிகாசலம் மற்றும் நிர்வாகிகள் நாராயணமூர்த்தி, வின்சென்ட் ராஜ், துணை தலைவர்கள் ஏகாம்பரம், வேணுகோபால், காணிக்கை ராஜ், இணை செயலாளர்கள் கந்தசாமி, கன்னியப்பன், கோபால், உத்திரமேரூர் வட்ட தலைவர் பிரபாவதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post 70 வயது நிரம்பிய ஓய்வூதியதாரர்களுக்கு 10% பென்ஷன் வழங்க வேண்டும்: சங்க அமைப்பு தின விழாவில் தீர்மானம் appeared first on Dinakaran.

Related Stories: