இதுகுறித்து மாணவனிடம் அவரது பெற்றோர் விசாரித்துள்ளனர். அப்போது பள்ளியில் தமிழ் ஆசிரியர் சுதாகர் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது தெரியவந்தது. இதனால் மாணவனுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு உடல் நலக்குறைவு ஏற்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. உடனே அந்த பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர், சம்பந்தப்பட்ட பள்ளியில் தமிழ் ஆசிரியர் மீது புகார் அளித்தனர். ஆனால் பள்ளி நிர்வாகம் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் குமரன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் படி போலீசார் முதலில் சரியாக விசாரணை நடத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் தனது உறவினர்களுடன் குமரன்நகர் காவல் நிலையத்தை நேற்று முன்தினம் மாலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தை தொடர்ந்து போலீசார் மாணவனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை ஆவணங்கள் மற்றும் மாணவன் அளித்த வாக்குமூலத்தின் படி, தமிழ் ஆசிரியர் சுதாகர் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நேற்று முன்தினம் இரவு அதிரடியாக அவரை கைது செய்தனர்.
The post 9ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொந்தரவு அசோக்நகரில் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது: நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதால் மாணவனுக்கு சிகிச்சை appeared first on Dinakaran.