திருவனந்தபுரம்: கேரள மாநிலம் காசர்கோடு அருகே வெள்ளரிக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் தீபு பிலிப் (36). 10 வருடங்களுக்கு முன்பு காசர்கோட்டை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை திருமணம் செய்தார். 3 வருடங்களுக்கு மேல் தீபு பிலிப் அவருடன் வாழ்ந்து வந்தார். இதில் 2 குழந்தைகளும் பிறந்தன. அதன் பிறகு பெண்ணிடம் இருந்து நகை, பணத்தை பறித்து விட்டு நைசாக நழுவினார். பின்னர் தீபு பிலிப் 2வது பெண்ணுக்கு வலை விரித்தார். காசர்கோட்டிலேயே மீண்டும் ஒரு திருமணத்தை செய்தவர் ஒரு கட்டத்தில் அவரையும் விட்டுவிட்டு எர்ணாகுளத்தை சேர்ந்த ஒரு பெண்ணை 3வதாக திருமணம் செய்தார்.
இவருடன் இருந்த போது ஆலப்புழாவை சேர்ந்த விவாகரத்தான ஒரு பெண்ணுடன் பேஸ்புக் மூலம் தீபு பிலிப்புக்கு பழக்கம் ஏற்பட்டு 4வதாக திருமணம் செய்து கொண்டார். தீபு பிலிப்பின் 2வது மனைவியும், ஆலப்புழாவை சேர்ந்த 4வது மனைவியும் பேஸ்புக் தோழிகள் ஆனார்கள். அப்போது தான் 2 பேருக்கும் ஒரே கணவன் தான் என்பதை அவர்கள் புரிந்து கொண்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த 4வது மனைவி கோன்னி போலீசில் புகார் செய்தார். போலீசார் கல்யாண மன்னன் தீபு பிலிப்பை கைது செய்தனர்.
The post 4 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண மன்னன் கைது: 2,4வது மனைவிகள் பேஸ்புக் தோழிகள் ஆனதால் சிக்கினார் appeared first on Dinakaran.