இந்நிலையில், அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் நேற்று மாலை 22 இடங்களில் பொருத்தப்பட்ட 75 சிசிடிவி காமிராக்களின் கண்காணிப்பு பணிகளை ஆவடி காவல் ஆணையரக ஆணையர் கி.சங்கர் துவக்கி வைத்தார். இதில் காவல் ஆணையர் கி.சங்கர் பேசுகையில், ஒவ்வொரு இடங்களிலும் சிசிடிவி காமிராக்கள் மூலம் கண்காணித்து குற்றச் சம்பவங்களை தடுக்கவும், அவற்றின்மீது நடவடிக்கை எடுக்கவும் மூன்றாவது கண்ணாக விளங்கி வருகிறது.
இதில் ஆவடி காவல் ஆணையரக கூடுதல் ஆணையர் பவானீஸ்வரி, போக்குவரத்து காவல் துணை ஆணையர் அன்பு, அம்பத்தூர் சரக உதவி ஆணையர், தனியார் நிறுவன நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துக்கொண்டனர்.
The post அம்பத்தூர் தொழிற்பேட்டையில் 75 சிசிடிவி கேமரா மூலம் கண்காணிப்பு பணி: ஆவடி காவல் ஆணையர் கி.சங்கர் துவக்கினார் appeared first on Dinakaran.
