தா.பழூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் அண்ணா நினைவு நாள்

 

தா.பழூர், பிப். 5; அரியலூர் மாவட்டம் தா.பழூரில், அண்ணா 56 – வது நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு கிழக்கு ஒன்றியம் சார்பில் நடந்தது. தா.பழூர் கிழக்கு ஒன்றிய செயலாளரும், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினருமான க.சொ.க.கண்ணன் தலைமையில், தா.பழூர் சுத்தமல்லி பிரிவு சாலையில் உள்ள அண்ணாவின் முழு திருவுருவ வெண்கல சிலைக்கு திமுக. வினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வில், பொதுக்குழு முன்னாள் உறுப்பினர் அண்ணாதுரை,ஒன்றிய அவைத்தலைவர் சூசைராஜ், பொருளாளர் நாகராஜன், துணை செயலாளர்கள் சாமிதுரை, இராஜேந்திரன், இந்துமதி நடராஜன், மாவட்ட பிரதிநிதிகள் தமிழ்ச்செல்வன், கண்ணதாசன், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் சங்கர், கார்த்திகைகுமரன், சம்பந்தம், நளராசன், மருத்துவர் சங்கர், எழிலரசி அர்ச்சுனன் மற்றும் கிளை கழக நிர்வாகிகள், அனைத்து அணி நிர்வாகிகள், என பலரும் கலந்துகொண்டனர்.

The post தா.பழூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் அண்ணா நினைவு நாள் appeared first on Dinakaran.

Related Stories: