தொழில் முனைவோர் கருத்தரங்கம்

 

ஒட்டன்சத்திரம், பிப். 1: ஒட்டன்சத்திரத்தில் உள்ள சக்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில் முனைவோர் மேம்பாட்டு துறை பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. சக்தி கல்வி குழுமத்தின் தாளாளர் வேம்பணன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் தேன்மொழி தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக நிறுவனர் சிஆர்சிடி உணவு உற்பத்தியாளர் சங்கரலிங்கம் கலந்து கொண்டு தொழில் முனைவோர் மேம்பாட்டு துறை குறித்து மாணவிகளுக்கு பற்றி விளக்கி கூறியதுடன், தொழில் முனைவோருக்கான பயிற்சிகளையும் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை தொழில் முனைவோர் துறை ஒருங்கிணைப்பாளர்கள் செல்வமணி, ஆங்கில துறை உதவி பேராசிரியர் செல்வமணி, கணித துறை உதவி பேராசிரியர் நந்தினி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

 

The post தொழில் முனைவோர் கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Related Stories: