மாஞ்சோலை அருகே ரேஷன் கடை ஜன்னலை உடைத்து பொருள் திருட்டு

அம்பை, பிப்.1: நெல்லை மாவட்டம், மாஞ்சோலை தேயிலை தோட்டப் பகுதி மக்களுக்காக நாலுமுக்கு எஸ்டேட்டில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்தக் கடையில் கல்லிடைக்குறிச்சி, தெற்கு பாப்பான்குளம், வேதக் கோயில் தெருவைச் சேர்ந்த டேனியல் (47) விற்பனையாளராக வேலை செய்து வருகிறார். கடந்த ஜன.24ம் தேதி டேனியல் ரேஷன் கடைக்கு சென்று ரேஷன் பொருட்களை விநியோகம் செய்தார். பின்னர் அவர் நேற்று முன்தினம் கடையை திறக்க சென்ற ேபாது, கடையின் ஜன்னல் உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது 18 கிலோ பருப்பு, 10 கிலோ சீனி, 4 லிட்டர் பாமாயில், 65 லிட்டர் மண்ணெண்ணெய் ஆகிய ரேஷன் பொருட்கள் திருடு போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து மாஞ்சோலை போலீசில் டேனியல் அளித்த புகாரின் பேரில், மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

The post மாஞ்சோலை அருகே ரேஷன் கடை ஜன்னலை உடைத்து பொருள் திருட்டு appeared first on Dinakaran.

Related Stories: