மலேசியா: 19வயதுக்கு உட்பட்ட வீராங்கனைகள் பங்கேற்கும் 2வது ஜூனியர் மகளிர் உலகக்கோப்பை டி20 போட்டிகள், மலேசியாவில் நடந்து வருகிறது. 16 அணிகள் பங்கேற்ற நிலையில், லீக், சூப்பர் சிக்ஸ் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. 2 குரூப்களிலும் முதல் இரு இடங்களை பிடித்த இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. முதல் அரையிறுதி போட்டி, இன்று (31ம் தேதி) கோலாலம்பூரில் பயுமாஸ் ஓவல் மைதானத்தில் நடக்கிறது. இப்போட்டியில் இந்தியா, இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த உலகக்கோப்பை தொடரில், இந்தியா இதுவரை தோல்வியடையாமல் உள்ளது. அதேநேரத்தில் இங்கிலாந்து சூப்பர் சிக்ஸ் கட்டத்தில், இரண்டில் வெற்றி பெற்று, இரண்டில் தோல்வியடைந்து அரையிறுதிக்கு தட்டுத்தடுமாறி வந்துள்ளது. இதனால், அரையிறுதியில் இந்தியாவின் வலிமையான பேட்டிங் மற்றும் ஃபார்மில் உள்ள பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள இங்கிலாந்து திணறும் என்றே முன்னாள் வீரர்கள் கணித்துள்ளனர். மதியம் 12 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
The post யூ19 மகளிர் டி20 உலகக்கோப்பை அரையிறுதி: பைனலுக்கு முன்னேறும் முனைப்பில் இந்தியா; இங்கிலாந்துடன் இன்று மோதல் appeared first on Dinakaran.