ராமேஸ்வரத்தில் குடியரசு தினம்

 

ராமேஸ்வரம்,ஜன.28: ராமேஸ்வரம் தீவில் அரசு பள்ளி மற்றும் முக்கிய இடங்களில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் தேசிய நினைவகத்தில் பொறுப்பு அதிகாரி தேசிய கொடியை பறக்கவிட்டார். ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டாடினர். முஸ்லீம் தெருவில் உள்ள அப்துல்காலமின் இல்லத்தில் அவரது அண்ணன் மகள் நசிமா மரைக்காயர் தேசிய கொடியை பறக்கவிட்டார்.

ராமேஸ்வரம் வர்த்தகம் தெருவில் அமைந்துள்ள அப்துல் கலாம் பயின்ற மண்டபம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை ராஜலட்சுமி தேசிய கொடியை பறக்கவிட்டார். பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளி வளாகத்தில் வண்ண கோலமிட்டு அலங்கரித்தனர். ராமநாதசுவாமி கோயில் அலுவலகத்தில் கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் கொடியை ஏற்றி பறக்கவிட்டார். நகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் கண்ணன் கொடி ஏற்றினார். வாட்டாட்சியர் அலுவலகத்தில் விஏஓ ரோட்ரிகோ கொடி ஏற்றினார். தீவில் உள்ள அரசு பள்ளிகளிலும் குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடி பறக்கவிட்டு கொண்டாடப்பட்டது.

The post ராமேஸ்வரத்தில் குடியரசு தினம் appeared first on Dinakaran.

Related Stories: