பொன்னமராவதி,ஜன.28: பொன்னமராவதி வட்டார மருத்துவ அலுவலருக்கு செயல் திறன் விருது மாவட்ட கலெக்டர் அருணா வழங்கினார். குடியரசு தின விழாவை முன்னிட்டு புதுக்கோட்டையில் நடைபெற்ற விழாவில் புதுக்கோட்டை கலெக்டர் அருணா காரையூர் வட்டார மருத்துவஅலுவலர் அருள்மணி நாகராஜனுக்கு மகப்பேறு, பிறப்பு, இறப்பு, சிசு இறப்பு விகிதத்தை குறைத்து சிறப்பாக செயல்பட்டதை பாராட்டி சிறந்த செயல் திறன் விருது வழங்கினார்.
இதே போல பொன்னமராவதி தாலுகா அலுவலக வருவாய் ஆய்வாளர் ஈஸ்வரி, அரசமலை வருவாய் ஆய்வாளர் சுரேஷ்குமார், மறவாமதுரை கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் ஆகியோருக்கு சிறப்பாக பணியாற்றியமைக்காக புதுக்கோட்டை கலெக்டர் அருணா, நற்சான்று வழங்கினார். இதனைத் தொடர்ந்து இவர்கள் பொன்னமராவதி தாசில்தார் சாந்தாவிடம் வாழ்த்துபெற்றனர்.
The post பொன்னமராவதி வட்டார மருத்துவ அலுவலருக்கு செயல்திறன் விருது appeared first on Dinakaran.
