4 இந்தியர்கள் இடம்பெற்று அசத்தல்; ரோகித் சர்மா தலைமையில் ஐசிசி டி20 ஆண்கள் அணி: மகளிர் அணியில் மந்தனா, தீப்தி

லண்டன்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ள கடந்த 2024ம் ஆண்டின் சிறந்த ஆண்கள் டி20 கிரிக்கெட் அணியில் 4 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். கடந்தாண்டு முழுவதும் நடந்த டி20 போட்டிகளில் வீரர்களின் செயல்பாடுகளை பொறுத்து சிறந்த வீரர்கள் அணியை ஐசிசி உருவாக்கி உள்ளது. அணியின் கேப்டனாக இந்தியாவின் ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். தவிர, ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட், இங்கிலாந்தின் பில் சால்ட், பாக் வீரர் பாபர் அஸம், வெஸ்ட் இண்டீசின் நிக்கோலஸ் பூரன், ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராஸா, ஆப்கானிஸ்தானின் ரஷித் கான், இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா அணியில் இடம்பெற்றுள்ளனர்.

ஐசிசி நேற்று சிறந்த மகளிர் டி20 கிரிக்கெட் அணியையும் அறிவித்துள்ளது. இந்த அணியில் இந்தியாவின் அதிரடி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா, ரிச்சா கோஷ் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் மந்தனாவும், தீப்தியும், ஐசிசி அறிவித்த சிறந்த மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் அணியிலும் இடம்பெற்றிருந்தனர். ஐசிசி மகளிர் டி20 அணியில் இலங்கையின் சமாரி அத்தப்பட்டு, வெஸ்ட் இண்டீசின் ஹேலி மாத்யூஸ், இங்கிலாந்து வீராங்கனை நாட் சிவர் பிரன்ட், நியூசிலாந்தின் மெலி கெர், அயர்லாந்து ஆல்ரவுண்டர் ஒர்லா பிரெண்டர்காஸ்ட், பாகிஸ்தான் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் சாடியா இக்பால், தென் ஆப்ரிக்காவின் மாரிஸான் காப் இடம் பெற்றுள்ளனர். அணியின் கேப்டனாக தென் ஆப்ரிக்கா வீராங்கனை லாரா உல்வார்ட் அறிவிக்கப்பட்டுள்ளார்.

The post 4 இந்தியர்கள் இடம்பெற்று அசத்தல்; ரோகித் சர்மா தலைமையில் ஐசிசி டி20 ஆண்கள் அணி: மகளிர் அணியில் மந்தனா, தீப்தி appeared first on Dinakaran.

Related Stories: