உழவரைப் போற்றுவதும், தாயைப் போற்றுவதும் வேறல்ல: மநீம தலைவர் கமல்ஹாசன் உழவர் திருநாள் வாழ்த்து

சென்னை: உழவரைப் போற்றுவதும், தாயைப் போற்றுவதும் வேறல்ல என மநீம கட்சி தலைவர் கமல்ஹாசன் உழவர் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அறுவடை முடிந்து அந்த நெல்லில் அரிசி எடுத்து சூரிய பகவான் உதயமாகும் முன் பொங்கல் வைத்து சாமிக்கும் படைக்கும் பொங்கல் திருநாள் தமிழக மக்களின் உணர்வுகளில் கலந்த ஒன்று. அந்த வகையில், தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் ஜன.14ம் தேதி உற்சாகமாக கொண்டாடப்படும்.

போகி பண்டிகை தொடங்கி திருவள்ளுவர் தினம் வரை என நான்கு நாட்கள் கொண்டாடப்படும் இந்த நாளில் உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் சூரியன், கால்நடைகளுக்கு மக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர். மேலும் அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும், மநீம கட்சி தலைவருமான கமல்ஹாசன் இது குறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள வாழ்த்து செய்தியில்,

இந்தத் தேசத்துக்கு விடுதலை கிடைத்த போது மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு ஒரு வேளை உணவுக்குக் கூட வழியில்லை. ‘பஞ்சப் பராரிகளின் நாடு’ என இழிவு செய்யப்பட்ட நாம் பசியை வென்றதற்கு ஒரே காரணம் நமது விவசாயிகள்.’நாட்டுப்புறத்தான்’ தன் காட்டுக்குச் செல்வதால்தான் நம் வீட்டுக்குள் பசி இல்லை என்பதை உணர்வதும்; உழவர்களுக்கு ஒன்றென்றால் அவர்களுக்கு உடன் நிற்பதும்தான் நம் நன்றியைக் காட்டும் வழிகள்.உழவரைப் போற்றுவதும், தாயைப் போற்றுவதும் வேறல்ல. உழவர் திருநாள் வாழ்த்துகள். இவ்வாறு வாழ்த்து தெரிவித்தார்.

The post உழவரைப் போற்றுவதும், தாயைப் போற்றுவதும் வேறல்ல: மநீம தலைவர் கமல்ஹாசன் உழவர் திருநாள் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: