பெட்டிகள் எண்ணிக்கை உயர்த்தப்பட்ட நிலையில் வந்தே பாரத் எக்ஸ்பிரசில் முன்பதிவுகள் விறுவிறுப்பு

நெல்லை: பெட்டிகள் எண்ணிக்கை உயர்த்தப்பட்ட நிலையில், வந்தே பாரத் எக்ஸ்பிரசில் முன்பதிவுகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நெல்லை- சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இதுநாள் வரை 8 பெட்டிகளோடு இயங்கி வருகிறது. இப்பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்க பயணிகள் விடுத்த கோரிக்கை அடிப்படையில், தெற்கு ரயில்வே நாளை 15ம் தேதி முதல் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்க உள்ளது. நெல்லை – சென்னை (எண் 20666) மற்றும் சென்னை – நெல்லை (எண் 20665) இடையே இரு மார்க்கத்திலும் 11ம் தேதி முதல் ரயிலில் கூடுதலாக 8 பெட்டிகளை இணைக்கப்படும் என முதலில் அறிவிப்பு வெளியானது.

இதையடுத்து பொங்கல் பண்டிகைக்கு சென்னைக்கு ஊருக்கு திரும்புவோர் வந்தே பாரத் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ஆர்வமாக காத்திருந்தனர். இந்நிலையில் நிர்வாக காரணங்களால் அம்முடிவு கைவிடப்பட்டது. இந்நிலையில் இன்று செவ்வாய்கிழமை என்பது நெல்லை வந்தே பாரத் எக்ஸ்பிரசிற்கு விடுமுறை தினமாகும். நாளை 15ம் தேதி புதன்கிழமை கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்பட்டு, புதுப்பொலிவுடன் வந்தே பாரத் இயக்கப்பட உள்ளது.

தென்மாவட்ட பயணிகளுக்கு பொங்கல் பரிசாக 16 பெட்டிகளோடு வந்தே பாரத் இயக்கப்படும் நிலையில், அதற்கான முன்பதிவுகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. அதிலும் 17ம் தேதி காலையில் சென்னைக்கு செல்வோர் மற்றும் 19ம் தேதி ஞாயிற்று கிழமை சென்னைக்கு செல்ல விறுவிறுப்பு மளமளவென நடந்து முடிந்துள்ளது. பொங்கல் முடிந்து சென்னைக்கு செல்வோர், கூடுதல் கட்டணம் செலுத்தினால் கூட பராவாயில்லை, ரயிலில் சென்னை செல்ல வேண்டும் என்ற நோக்கில் வந்தே பாரத் எக்ஸ்பிரசில் முன்பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post பெட்டிகள் எண்ணிக்கை உயர்த்தப்பட்ட நிலையில் வந்தே பாரத் எக்ஸ்பிரசில் முன்பதிவுகள் விறுவிறுப்பு appeared first on Dinakaran.

Related Stories: