×

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை தொடங்கியது: லாரிகளில் வந்த கரும்பு, மஞ்சள் கொத்து, வாழை இலைகள்

அண்ணா நகர்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை நள்ளிரவு முதல் பயன்பாட்டுக்கு வந்தது. தமிழர்களின் பண்டிகைகளில் மிக முக்கியமான பொங்கல் பண்டிகை, வரும் 14ம் தேதி விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பொதுமக்களின் நலன் கருதி கோயம்பேடு மார்க்கெட்டில் 10 நாட்களுக்கு சிறப்பு சந்தை நேற்று நள்ளிரவு தொடங்கியது. வரும் 16ம் தேதி வரை சிறப்பு சந்தை நடைபெறும். இங்கு, வாழை, மஞ்சள் கொத்து, கரும்பு மற்றும் மண்பானை, வாழை இலை உள்ளிட்ட பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் நேற்று முதல் லாரி லாரியாக வந்துள்ளது.

கடலூர், மதுைர, விழுப்புரம், தேனி ஆகிய மாவட்டங்களில் இருந்து இன்று 35 லாரிகளில் கரும்பு வந்துள்ளது. 10 கரும்பு கொண்ட ஒரு கட்டு ரூ.400 முதல் ரூ.800 வரை விற்பனை செய்யப்பகிறது. ஈரோடு மற்றும் ஆந்திராவில் இருந்து மஞ்சள் கொத்து வரத்து உள்ளது. ஒரு கட்டு மஞ்சள் கொத்து ரூ.300 வரை விற்கப்படுகிறது. வாணியம்பாடியில் இருந்து தோரணம் வந்துள்ளது. வத்தலகுண்டு, தஞ்சாவூர், வேலூர் மற்றும் ஆந்திராவில் இருந்து வாழை இலை வரத்து உள்ளது. ஒரு பெரிய கட்டு இலை ரூ.1,100 எனவும், சிறிய கட்டு ரூ.800க்கும் விற்கப்படுகிறது.

ஒரு இலை ரூ.3 விற்கப்படுகிறது. நாளை முதல் அனைத்து பொருட்களின் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் துணைத்தலைவர் முத்துராஜ் கூறுகையில், கோயம்பேடு மார்க்கெட்டில் போடப்படும் சிறப்பு சந்தையில் மக்களின் கூட்டம் அதிகரித்து காணப்படும். அதனால் கூட்டத்தை பயன்படுத்தி குற்ற சம்பவங்கள் நடைபெறுவதை தவிர்க்க மார்க்கெட் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுரத்தின் மீது போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்’ என்றார்.

The post பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை தொடங்கியது: லாரிகளில் வந்த கரும்பு, மஞ்சள் கொத்து, வாழை இலைகள் appeared first on Dinakaran.

Tags : Koyambedu market ,Pongal festival ,Anna Nagar ,Pongal ,Koyambedu… ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சீசன் காய்கறிகள் வரத்து அதிகரிப்பு