நா.மூ.சுங்கம் அருகே பாலம் அமைக்கும் பணி தீவிரம்: போக்குவரத்து மாற்றம்


பொள்ளாச்சி: பொள்ளாச்சியிலிருந்து வால்பாறை செல்லும் ரோட்டில், பகல் மற்றும் இரவு நேரம் என தொடர்ந்து வாகன போக்குவரத்து உள்ளது. சுற்றுலா பகுதி உள்ள இடம் என்பதால் அந்த வழியாக செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதில், வால்பாறை ரோடு நா.மூ.சுங்கம் சண்முகபுரம் வழியாக செல்லும் பாலாறு அருகே கால்வாய் செல்கிறது. அந்த கால்வாயின் ஒரு பகுதி சேதமானதாக கூறப்படுகிறது. ரோட்டை கடந்து செல்லும் அந்த கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்காக, சுமார் ஒரு வாரத்துக்கு முன்பு அப்பகுதியில் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டு, வால்பாறை ரோட்டில் செல்லும் அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் இயக்க அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இதையடுத்து, சண்முகபுரம் பகுதியில் ரோட்டை தோண்டி கால்வாயை புதுப்பிக்கும் பணி துவங்கப்பட்டது. அண்மையில் தரைமட்டத்தில் கான்கிரீட் போடப்பட்டன. தற்போது, பக்கவாட்டு சுவர் தயார்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. வாகன போக்குவரத்து மிகுந்த இடம் என்பதால், அப்பணியை விரைந்து நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post நா.மூ.சுங்கம் அருகே பாலம் அமைக்கும் பணி தீவிரம்: போக்குவரத்து மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: