×

சுற்றுலா தலமாகும் குமரகிரி ஏரி; ரூ7 கோடியில் சிறுவர் பூங்கா தியான மண்டபம் அமைப்பு: ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணி மும்முரம்

சேலம்: சேலம் அம்மாபேட்டை குமரகிரி ஏரியை சுற்றுலாதலமாக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக ₹7கோடியில் சிறுவர் பூங்கா, தியானமண்டபம், பரிசல் சவாரி செய்யும் திட்டுக்கள் அமைக்கப்படுகிறது. மேலும் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்படுகிறது. இதற்காக ஏரியில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. சேலத்தில் உள்ள நீர் நிலைகளை மேம்படுத்தும் வகையில் ஏரிகளை சீரமைக்கவும், நீர் ஆதாரத்தை பெருக்கிடவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பள்ளப்பட்டி ஏரி, குமரகிரி ஏரி மறு சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில், 40ஏக்கரில் உள்ள குமரகிரி ஏரிக்கு, கந்தகிரியில் இருந்து ராமநாதபுரம் ஓடை வழியாக குமரகிரி ஏரிக்கு நீர் வரத்து வருகிறது. இதில் கழிவு நீரும் கலந்து வந்தது.

இதையடுத்து, குமரகிரி ஏரியை மறு சீரமைக்கும் வகையில் ₹20 கோடியில் திட்டஅறிக்கை தயாரிக்கப்பட்டது.அதில், ஏரியை சுற்றி கம்பி வேலி அமைத்தல்,ஏரி கரையை வலுப்படுத்துதல், நடைபாதை அமைத்தல், சோலார்மின் விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஏரிக்கு வரும் கழிவு நீரை தனியாக கால்வாய் அமைத்து பாவடி பள்ளி அருகில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து, ஏரியில்பொதுமக்களின் வசதிக்காகவும் சுற்றுலாதலமாக்கும் வகையிலும் மேலும் பல பணிகள் மேற்கொள்ள அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதில், சிசிடிவி கேமரா, பொது மக்கள் அமரும் வகையில் கிரானைட் பெஞ்சுகள், தியான மண்டபம், சிறுவர்கள் விளையாட உபகரணங்கள், படகு சவாரி செய்யும் வகையில் திட்டுகள், ஏரியின் முகப்பு அழகுப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இப்பணிக்கு கூடுதலாக ₹7 கோடியில் திட்டஅறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. வரும் நிதியாண்டியில் இப்பணிகள்மேற்கொள்ளப்பட உள்ளது. இதனிடையே இந்த பணிகளுக்கு முன்னோட்டமாக ஏரியில் அதிகமாக படர்ந்துள்ள ஆகாய தாமரையை அகற்றவேண்டும் என்பது பொது மக்களின் கோரிக்கையாக இருந்தது. இதையடுத்து பொக்லைன் மூலம் ஏரியில்உள்ள ஆகாய தாமரைகளை அகற்றப்பட்டு வருகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:சேலம் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குமரகிரி ஏரி சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சுற்றுலாதலமாக்கவும், பொது மக்களின் வசதிக்காகவும் ஏரியில் கூடுதலாக ₹7 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படஉள்ளன. சிசிடிவி கேமரா, சிறுவர் பூங்கா, தியான மண்டபம், படகு சவாரிக்கு ஏற்ப கட்டுமானங்களை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

சேலம் மூக்கனேரி, போடிநாயக்கன்பட்டி ஏரி, அல்லிக்குட்டை ஏரி, இஸ்மாயில்கான்ஏரியின் நீர்நிலைகளை மேம்படுத்தும்பணிமேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த 4 ஏரிகளிலும் கரைகள் மேம்படுத்துதல், ஆழப்படுத்துதல், பூங்கா, மின் விளக்குகள் அமைக்கப்படுகிறது. இந்த மறுசீரமைப்பு பணிகளால் 4 ஏரிகளும் புதுப்பொலிவு பெறும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர். மூக்கனேரி, போடிநாயக்கன்பட்டி ஏரி, அல்லிக்குட்டை ஏரி, இஸ்மாயில்கான்ஏரியின் நீர்நிலைகளை மேம்படுத்தும்பணிமேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த 4 ஏரிகளிலும் கரைகள் மேம்படுத்துதல், ஆழப்படுத்துதல், பூங்கா, மின் விளக்குகள் அமைக்கப்படுகிறது. இந்த மறுசீரமைப்பு பணிகளால் 4 ஏரிகளும் புதுப்பொலிவு பெறும்.

The post சுற்றுலா தலமாகும் குமரகிரி ஏரி; ரூ7 கோடியில் சிறுவர் பூங்கா தியான மண்டபம் அமைப்பு: ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணி மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Kumaragiri Lake ,Salem ,Ammapet ,
× RELATED ஜென்ம நட்சத்திரத்தில் என்னென்ன செய்யலாம்?