×

403 கடைக்கு சீல் புகையிலை வழக்குகளில் ரூ.1.06 கோடி அபராதம்

விருதுநகர், ஜன.10: விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 1,531 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, 403 கடைகளுக்கு சீல் வைத்து ரூ.1.06 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல்துறையினர் இணைந்து 831 முறை தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சோதனை நடத்தப்பட்டது. இதில் 403 கடைகள் மற்றும் 44 வாகனங்களில் இருந்து 1,531 கிலோ எடையிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

403 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் 403 கடைகள் மற்றும் 44 வாகனங்களுக்கு ரூ.1,06,16,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் நடப்பாண்டில் ஜன.1 முதல் 4ம் தேதி வரை நடத்தப்பட்ட ஆய்வில் 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.1.75 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பான திடீர் ஆய்வு தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post 403 கடைக்கு சீல் புகையிலை வழக்குகளில் ரூ.1.06 கோடி அபராதம் appeared first on Dinakaran.

Tags : 403 ,Virudhunagar ,Virudhunagar district ,Food Safety Department ,Dinakaran ,
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே...