- Kumbabhishekam
- திருமலை நம்பி
- கோவில்
- திருக்குறுங்குடி
- Kalakkadu
- திருமலைநம்பி கோவில்
- மேற்குத்தொடர்ச்சி
- ஆழ்வார்கள்
களக்காடு,ஜன.10: திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயிலில் பிப்.9ம் தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது. களக்காடு அருகேயுள்ள திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்ந்த வனப்பகுதியில் பழமை வாய்ந்த திருமலைநம்பி கோயில் உள்ளது. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இக்கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. இப்பகுதி பக்தர்களால் ஏழைகளின் திருப்பதி என்றழைக்கப்படும் இக்கோயிலுக்கு வாரம் தோறும் சனிக்கிழமைகளிலும், தமிழ் மாத முதல் மற்றும் கடைசி சனிக்கிழமைகளிலும் பக்தர்கள் சென்று வழிபட்டு வருகின்றனர். பிரசித்திப் பெற்ற இந்த கோயில் கும்பாபிஷேக விழா வரும் 9ம் தேதி ராமானுஜ ஜீயர் முன்னிலையில் நடக்கிறது. இதை முன்னிட்டு வரும் ஜன. 31ம் தேதி பாலாலய வைபவம் நடக்கிறது. ஏற்பாடுகளை ஜீயர் மடம் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
The post திருக்குறுங்குடியில் பழமை வாய்ந்த திருமலைநம்பி கோயிலில் பிப்.9ல் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.