×

மிரட்டல் விடுத்த திருநங்கைகள் கைது

நெல்லை, ஜன.10: களக்காடு, கக்கன் நகரை சேர்ந்தவர் பாப்பாத்தி (36). இவரது மகனும், அதே பகுதியை சேர்ந்த திருநங்கையான நித்யா  (19) என்பவரது சகோதரியும் சேர்ந்து புகைப்படம் எடுத்தனர். இதை பார்த்த பாப்பாத்தி சப்தம் போட்டார். இதில் நித்யா , அவரது திருநங்கை தோழியான உடன்குடி, சமத்துவபுரத்தை சேர்ந்த கன்னிகா  (26) மற்றும் சிலர் சேர்ந்து பாப்பாத்தியை பெண் என்றும் பாராமல் அவதூறாக பேசி தாக்கி காயம் ஏற்படுத்தியதோடு மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த களக்காடு எஸ்ஐ லியோ ரெனிஸ், நித்யா , கன்னிகா  ஆகிய இருவரையும் கைது செய்தார்.

The post மிரட்டல் விடுத்த திருநங்கைகள் கைது appeared first on Dinakaran.

Tags : Nellai ,Papathi ,Kakkan Nagar, Kalakkadu ,Nithya ,
× RELATED நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஜனவரி...