- யூனியன் அரசு
- கர்நாடக
- துணை
- முதல் அமைச்சர்
- கும்பகோணம்
- துணை முதலமைச்சர்
- டி.கே.சிவகுமார்
- கும்பகோணம் அரசு ஆண்கள்
- கலை
- கல்லூரி
- தஞ்சாவூர் மாவட்டம்
- பெங்களூரு
- அரசு
கும்பகோணம்: கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டரில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசினர் ஆடவர் கலைக்கல்லூரி மைதானத்தில் உள்ள ஹெலிபேடுக்கு நேற்று காலை 10.20 மணிக்கு வந்தார். தொடர்ந்து அங்கு போலீசார் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட துணை முதல்வருக்கு, கும்பகோணம் சார் ஆட்சியர் ஹிருத்யா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் அங்கிருந்து காரில் கும்பகோணம் அருகே அய்யாவாடியில் உள்ள ஸ்ரீபிரத்தியங்கரா தேவி கோயிலுக்கு சென்று சிறப்பு தரிசனம் மேற்கொண்டார்.
அப்போது அவர் அளித்த பேட்டி: பாஜ ஆளாத மாநிலங்களில் உள்ள அரசுக்கு ஒன்றிய அரசு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறது. மாநில அரசுகளின் உரிமைகளை பறித்தும், போதுமான நிதி ஒதுக்காமல் அரசியல் செய்தும், தேவையற்ற பிரச்னைகளையும், தொந்தரவுகளையும் அளித்து வருகிறது. இதிலிருந்து மீள போராடி வருகிறோம். உரிமைகளுக்காகவும், வரி மூலம் கிடைக்க வேண்டிய வருவாய்க்காகவும் ஒன்றிய அரசுடன் போராட வேண்டிய நிலையில்தான் உள்ளோம். எனவே பாஜ ஆளாத மாநில அரசுகளுடன் சேர்ந்து குரல் கொடுத்து மாநில அரசின் உரிமைகளுக்காகவும், நிதி ஆதாரத்திற்காகவும் ஒன்றிய அரசை எதிர்த்து போராடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
The post மாநில அரசின் உரிமைகளுக்காக ஒன்றிய அரசை எதிர்த்து போராடுவோம்: கர்நாடக துணை முதல்வர் பேட்டி appeared first on Dinakaran.