×

ரூ.1,000 ஏன் வழங்க முடியவில்லை: அமைச்சர் விளக்கம்

சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1000 அறிவிக்கப்பட வேண்டும் என இந்திய கம்யூ. மாரிமுத்து கேள்விக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்தார். ஒன்றிய அரசு பல்வேறு திட்டங்களுக்கான நிதியை நிலுவை வைத்துள்ளதால் பொங்கல் பரிசு ரூ.1000 வழங்க முடியவில்லை. தமிழ்நாட்டில் வெள்ள நிவாரண பணிகளுக்கு ஒன்றிய அரசிடம் ரூ.37,000 கோடி கேட்டோம். ஆனால் ஒன்றிய அரசு வெறும் ரூ.276 கோடி மட்டுமே கொடுத்துள்ளது. சர்வ சிக்ஷா திட்டத்தில் பள்ளி கல்வித்துறைக்கு ரூ.2,155 கோடி இதுவரை விடுவிக்கவில்லை என்று கூறினார்.

The post ரூ.1,000 ஏன் வழங்க முடியவில்லை: அமைச்சர் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Finance Minister ,Thangam Thennarasu ,Indian ,Marimuthu ,Union Government ,Pongal ,Tamil Nadu… ,Minister ,Dinakaran ,
× RELATED டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணமே...