உகாண்டா: போர், வறுமை, நோய் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டு வாழ்க்கை சூழலில் சிக்கிக்கொண்டுள்ள சிறுவர்கள் அதிலிருந்து மீள நடனத்தை கையில் எடுத்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் கோடிக்கணக்கானோரின் இதயங்களை பறித்து வரும் உகாண்டாவை சேர்ந்த மசாகா கிட்ஸ் ஆப்ரிக்கானா நடனக்குழு இது. 25 சிறுவர்கள் இணைந்து ஆப்ரிக்க பாடலுக்கு நடனமாடி காணொலி பதிவிட்டு வருகின்றனர். சூனா ஹாசன் என்பவர் ஆதரவு இல்லாத குழந்தைகளுக்காக 2013ல் தனியார் தொண்டு நிறுவனமாக தொடங்கியதே மசாகா கிட்ஸ் ஆப்ரிக்கானா.
இக்குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட செலவினங்களுக்கு நிதி திரட்டும் நோக்கில் நடன கலைஞர் கிச்சா முஹூசி ஜானுடன் இணைந்து சமூக வலைத்தளங்களில் இப்பொது காணொளிகள் வெளியிட்டு வருகிறார் சூனா ஹாசன். இக்குழுவில் இருக்கும் ஒவ்வொரு குழந்தைக்கு பின்னும் ஒரு சோகம் சூழ்ந்துள்ளது. போர், புறந்தொற்று நோய்கள், வறுமை என இன்னல்களை சந்தித்து வரும் நாடு உகாண்டா. இதில் ஏதேனும் ஒரு பாதிப்பை சுமந்துகொண்டு வாழ்க்கை நடத்தி வருகின்றனர் இச்சிறுவர்கள். இவ்வளவுக்கு மத்தியிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது என்ற பிரபஞ்சத்தின் வரிகளுக்கு ஏற்ப எதிர்காலத்தில் பெரும் சாதனையாளர் ஆக வேண்டும் என்ற வேட்கையுடன் நம்பிக்கையுடன் எதிர்நீச்சல் அடித்துக்கொண்டிருக்கின்றனர்.
இன்ஸ்டா, யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கானோர் மசாகா கிட்ஸ் ஆப்ரிக்கானா பக்கத்தை பின்தொடர்கின்றனர். இவர்களின் ஒவ்வொரு பாடலும் லட்சக்கணக்கான பார்வைகளை பெறுகிறது. சிரிப்புக்காக ஆடுகிறோம் , தண்ணீருக்காக ஆடுகிறோம், நம்பிக்கைக்காக ஆடுகிறோம். நாம் நடன கலைஞர்கள் கனவுகளை உருவாக்கும் நடன கலைஞர்கள் என்ற ஐன்ஸ்டீனின் வரிகள் யாருக்கு பொருந்துகிறதோ, இல்லையோ எதிர்கால லட்சியங்களை நோக்கி நம்பிக்கையுடன் படித்து கொண்டிருக்கும் இக்குழந்தைகளுக்கு பொருந்துகிறது.
The post சமூக வலைதளங்களில் அசத்தி வரும் ஆப்பிரிக்க நடனக் குழு: உகாண்டாவின் “மசாகா கிட்ஸ் ஆப்ரிக்கானா” குழுவுக்கு வரவேற்பு appeared first on Dinakaran.