- டிரம்ப்
- எங்களுக்கு
- ஜோ பிடன்
- வாஷிங்டன்
- டொனால்டு டிரம்ப்
- வேந்தர்
- அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்
- குடியரசுக் கட்சி
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் 2வது முறையாக போட்டியிட்டு இருந்தால், டொனால்ட் டிரம்ப்பை தோற்கடித்து இருப்பேன்” என அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடந்தது. குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் போட்டியிட்டார். ஜனநாயக கட்சி சார்பில், ஜோ பைடன் களத்தில் இருந்தார். ஆனால், வயது முதிர்வு உள்ளிட்ட காரணத்தால் அவர் போட்டியில் இருந்து விலகினார் அவருக்கு பதிலாக
துணை அதிபர் கமலா ஹாரீஸ் போட்டியிட்டார். தேர்தலில் டிரம்ப் அமோக வெற்றி பெற்றார். வரும் 20ம் தேதி அவர் அதிபராக பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில் அதிபர் பைடன் அளித்த பேட்டியில், ‘அதிபர் தேர்தலில் போட்டியிட்டு இருந்தால், டிரம்ப்பை தோற்கடித்து இருப்பேன் என நம்புகிறேன். அதற்கான சிறந்த வாய்ப்பு என்னிடம் இருந்ததாக நினைக்கிறேன். ஆனால், 86 வயதாகும் நிலையில், மீண்டும் அதிபர் ஆக வேண்டும் என நான் விரும்பவில்லை. இதனால், போட்டியில் இருந்து ஒதுங்கினேன். 86 வயதாகும் நான், அடுத்து என்ன செய்யப்போகிறேன் என யாருக்கும் தெரியாது. தேர்தல் வெற்றிக்கு பிறகு ஓவல் அலுவலகத்தில் என்னை சந்தித்த டிரம்ப்பிடம், அரசியல் எதிரிகளை கண்டுபிடித்து பழிவாங்க வேண்டாம் என அவரிடம் கூறினேன். அதற்கு டிரம்ப், எந்த பதிலும் கூறவில்லை’ என்றார்.
The post அமெரிக்க அதிபர் தேர்தலில் 2வது முறை போட்டியிட்டிருந்தால் டிரம்பை தோற்கடித்திருப்பேன்: ஜோ பைடன் பேட்டி appeared first on Dinakaran.