×

பைக் திருடிச்செல்ல முயன்ற பீகார் வாலிபர் சிக்கினார் சேத்துப்பட்டு நகரில் சிங்கிள் காலம்….

சேத்துப்பட்டு, ஜன.9: சேத்துப்பட்டு நகரில் பைக்கை திருடிச்செல்ல முயன்ற பீகார் மாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர். சேத்துப்பட்டு கோவிந்தன் தெருவை சேர்ந்தவர் தாஸ் மகன் ராஜ்குமார்(23). இவர் நேற்று சேத்துப்பட்டு புறவழிச்சாலையில் தனது பைக்கை நிறுத்திவிட்டு இயற்கை உபாதையை கழிக்க ஒதுங்கினார். அப்போது, வடமாநில வாலிபர் ஒருவர் பைக்கை திருடிக்கொண்டு தப்பிச்செல்ல முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜ்குமார் கத்தி கூச்சலிட்டார். உடனே அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர், சேத்துப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற சப்- இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், தலைமை காவலர் சரவணன், விக்னேஷ்வரன் ஆகியோர் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர். அதில், பைக்கை திருடிச்செல்ல முயன்றவர் பீகார் மாநிலம், ஜாமுய் மாவட்டம், வில் மினிடன்ட் பகுதியை சேர்ந்த சந்திரிகா ரவிதாஸ் மகன் சாகர்குமார் என்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் சப்- நாராயணன் வழக்கு பதிவு செய்து, சாகர்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தார்.

The post பைக் திருடிச்செல்ல முயன்ற பீகார் வாலிபர் சிக்கினார் சேத்துப்பட்டு நகரில் சிங்கிள் காலம்…. appeared first on Dinakaran.

Tags : Sethupattu ,Das' ,Rajkumar ,Govindan Street ,Bypass Road ,Bihar ,
× RELATED பயாஸ்கோப் விமர்சனம்