- திமுக
- கவர்னர்
- EVMகள்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- திருவண்ணாமலை
- ஆர்.என்.ரவி
- தாய்
- வாஸ்தமி
- தமிழ்நாடு சட்டமன்றம்
திருவண்ணாமலை, ஜன.8: தமிழ்நாட்டையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து, திருவண்ணாமலையில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் உரையை படிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதேபோல், கடந்த ஆண்டும், உரையின் குறிப்பிட்ட பகுதிகளை படிக்காமல் புறக்கணித்தார். தொடர்ந்து, தமிழ்நாட்டையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் அவமதிக்கும் ஆளுநரை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக அறிவித்தது.
அதன்படி, திருவண்ணாமலை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக சார்பில், திருவண்ணாமலை அண்ணா சிலை எதிரில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் எம்பி தலைமை தாங்கினார். மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், எம்பி சி.என்.அண்ணாதுரை, மாவட்ட அவைத் தலைவர்கள் கண்ணன், ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாட்டையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து புறக்கணிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டும், தமிழ்நாட்டை விட்டுவெளியேற வேண்டும் என கண்டன முழக்கமிட்டனர். மேலும், பாஜகவின் ஏஜன்டாக ஆளுநர் செயல்படுவதாகவும், தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைக்கும் பாஜகவுடன் அதிமுக ரகசிய கூட்டு வைத்திருப்பதாகவும் குற்றம் சாட்டினர்.
அதைத்தொடர்ந்து, மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், எம்பிக்கள் எம்.எஸ்.தரணிவேந்தன், சி.என்.அண்ணாதுரை ஆகியோர், தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்படும் ஆளுநரின் செயல்பாடுகளை கண்டித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தில், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இரா.ஸ்ரீதரன், ஆர்.சிவானந்தம், கே.வி.ராஜ்குமார், வேல்முருகன், நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், மாவட்ட பொருளாளர்கள் எஸ்.பன்னீர்செல்வம், தட்சணாமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர்கள் பிரியா விஜயரங்கன், ஜெயராணிரவி, பாண்டுரங்கன், லோகநாதன், முன்னாள் எம்எல்ஏ கோ.எதிரொலிமணியன், தொமுச மாநில செயலாளர் க.சவுந்திராஜன், மாவட்ட அமைப்பாளர்கள் டிவிஎம்.நேரு, கு.ரவி, ஏ.ஏ.ஆறுமுகம், மெய்கண்டன், மேயர் நிர்மலாவேல்மாறன், துணை மேயர் சு.ராஜாங்கம், குட்டி புகழேந்தி, இளைஞர் அணி நரேஷ்குமார், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதிசீனுவாசன் மற்றும் ஒன்றிய, நகர, ேபரூர் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
The post ஆளுநரை கண்டித்து திமுக கண்டன ஆர்ப்பாட்டம் * எம்பிக்கள், எ.வ.வே.கம்பன் பேச்சு * 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு தமிழ்நாட்டை தொடர்ந்து அவமானப்படுத்தும் appeared first on Dinakaran.