- பிரேமலதா விஜயகாந்த் சுவாமி
- திருவண்ணாமலை அண்ணாமலை கோயில்
- திருவண்ணாமலை
- தேமுதிக
- பொதுச்செயலர்
- பிரேமலதா விஜயகாந்த்...
திருவண்ணாமலை, ஜன.6: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது, தற்போதுள்ள கூட்டணி தொடர்கிறது என தெரிவித்தார்.
திருவண்ணாமலையில் நேற்று இரவு நடந்த தேமுதிக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வந்திருந்தார். முன்னதாக, அண்ணாமலையார் கோயிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில், நாங்கள் இருக்கும் கூட்டணி தொடர்கிறது.
தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு கால அவகாசம் இருக்கிறது. 2026ல் மிகப்பெரிய அளவில் கூட்டணி அமையும். அதற்காக, ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று கட்சியை வலுபடுத்துவதற்காக சுற்றுப்பயணம் செய்து வருகிறேன், என்றார். தொடர்ந்து, திருவண்ணாமலை தீபமலையில் மலைச்சரிவு ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டார். மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர், தண்டராம்பட்டு அருகே பெஞ்சல் புயல் வெள்ளத்தால் உடைந்து சேதமடைந்த தென்பெண்ணை ஆற்றுப்பாலத்தையும் பார்வையிட்டார். அப்போது, தேமுதிக நிர்வாகிகள் உள்பட பலர் உடனிருந்தனர்.
The post பிரேமலதா விஜயகாந்த் சுவாமி தரிசனம் தற்போதுள்ள கூட்டணி ெதாடர்கிறது என பேட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் appeared first on Dinakaran.