×

மாற்றுத்திறனாளி வாலிபர் தீக்குளித்து தற்கொலை திருமண ஏக்கத்தால் விரக்தி

திருவண்ணாமலை, ஜன.7: திருவண்ணாமலை அருகே திருமணம் செய்து வைக்காமல் பெற்றோர் தாமதித்ததால், விரக்தி அடைந்த வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். திருவண்ணாமலை அடுத்த பெரிய பாலியப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு மகன் விஜயகுமார்(29). மாற்றுத்திறனாளி. திருமணம் நடைபெறாமல் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டதால், விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, ஏற்கனவே பெற்றோரிடம் பலமுறை கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் மண்ணெண்ணெய் எடுத்து உடலில் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். இதனால், அலறி துடித்த அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று விஜயகுமார் இறந்தார். இது தொடர்பாக, அவரது தந்தை ராமு அளித்த புகாரின் பேரில், திருவண்ணாமலை மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மாற்றுத்திறனாளி வாலிபர் தீக்குளித்து தற்கொலை திருமண ஏக்கத்தால் விரக்தி appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Ramu ,Vijayakumar ,Periya Paliyapattu ,
× RELATED பெண் எஸ்ஐயிடம் தகராறு செய்த வாலிபர் கைது