- விழுப்புரம்
- அஇஅதிமுக
- முன்னாள் அமைச்சர்
- சண்முகம்
- விழுப்புரம் மாவட்டம்
- சி.வி.சண்முகம்
- எம்பி...
- துணை அதிபர்கள்
- தின மலர்
விழுப்புரம், ஜன. 9: ஆளுநருக்கு முழு அதிகாரம் வழங்கி சாராயம், பிராந்தி கடை நடத்துபவர்களை துணைவேந்தர்களாக நியமிக்க திட்டமிட்டுள்ளனர் என்று அதிமுக மாஜி அமைச்சர் சண்முகம் எம்பி கூறினார். விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி சண்முகம் எம்பி நேற்று கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் பன்னீர் கரும்பு கொள்முதலில் சாதிய பாகுபாடு பார்ப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. மத்தியில் ஆளுகின்ற பாஜ அரசு, யூசிஜி என்கின்ற பல்கலைக்கழக மானியகுழு ஒரு மாதிரி சட்டத்தை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் மாநிலத்தின் உரிமைகள் முற்றிலுமாக பறிக்கப்பட்டிருக்கிறது. உயர்கல்வியில் தமிழகத்தின் உரிமை பறிக்கப்படுகிறது.
பல்கலைக்கழகத்தில் வேந்தர்களை, துணைவேந்தர்களை நியமிக்கின்ற குழுவில் ஏற்கனவே மாநில அரசின் சார்பாக ஒருவர் நியமிக்கப்படுவார். ஆனால் யூசிஜி வெளியிட்டிருக்கிற செயல் திட்டத்தில் மாநிலத்திற்கு கொடுக்கப்பட்ட அதிகாரம், மாநில அரசால் நியமிக்கப்படுகிற உறுப்பினர் இனி நியமிக்க முடியாது. அதற்கான அதிகாரம் முழுவதுமாக ஆளுநருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இனிமேல், ஆளுநர் நியமிக்கலாம். சின்டிகேட் ஒருவரை நியமிக்கலாம். யூசிஜி நியமிக்கலாம். அந்த மூவரில் ஒருவரை ஆளுநர் நியமிப்பார்.
அவர்களுக்கு இங்கே இடம்கொடுப்பது மாநில அரசு. பல்கலைக்கழகத்தை உருவாக்குவது மாநிலஅரசு. அவர்களுக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பது மாநில அரசு. கட்டிடங்களை கட்டிக்கொடுப்பது மாநில அரசு. சம்பளம் கொடுப்பது மாநில அரசு. ஆனால் மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. இதுவரை ஆசிரியர் பணி செய்பவர்கள் துணைவேந்தர்களாக நியமிக்கப்படுவார்கள்.
ஆனால் இப்போது சொல்லும் இந்த விதியில், ஆசிரியர் அல்லாதவர்களும் துணைவேந்தர் பொறுப்புக்கு நியமனம் செய்யப்படலாம். புதிய விதியில் தொழில்துறையில் அனுபவம் உள்ளவர்கள் வியாபாரம் செய்பவர், தொழில் நடத்துபவர் கேட்டால் இன்ஸ்டஸ்டியல் லிஸ்ட் என்கின்றனர். அவர் என்ன இன்டஸ்டியல் என்று கேட்டால் சாராயம் கடை நடத்தியிருப்பார், பிராந்தி கடை நடத்தியிருப்பாார்.
அவர்களெல்லாம் இன்டஸ்டியல் லிஸ்ட். தொழில் நடத்துபவர், தொழில்முனைவோர் துணைவேந்தர்களாக வரலாம். மேலாண்மை துறையிலிருந்து வருபவர்கள்கூட துணைவேந்தர்களாகலாம் என்று புதிய சட்டம் கூறுகின்றது. ஒன்றிய அரசு பொறுப்பேற்றபின் ஒருபக்கம் இடஒதுக்கீட்டிற்கு எதிரான நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது. மற்றொரு பக்கம் மாநிலத்துக்கான உரிமைகளை பறித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக கல்வித்துறையில் மமேற்கொள்ளும் நடவடிக்கைக்கு என்ன காரணம். மறைமுகமாக செய்து கொண்டிருந்த இந்தி திணிப்பு மற்றும் அவர்களுடைய கொள்கைகளை யூசிஜி மூலம் அதிகாரங்களை எடுத்து கொண்டு துணைவேந்தர்களை நியமிப்பதன் மூலம் ஆளுநருக்கு முழுக்க, முழுக்க அதிகாரத்தை வழங்குகிறது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது சட்டமன்ற தொகுதி வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ராதிகா செந்தில், ஒன்றிய செயலாளர் சுரேஷ் பாபு, நகர செயலாளர் ராமதாஸ் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
The post ஆளுநருக்கு முழு அதிகாரத்தை வழங்கி சாராயம், பிராந்தி கடை நடத்துபவர்களை துணைவேந்தர்களாக நியமிக்க திட்டம் appeared first on Dinakaran.