விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் ஸ்க்ரப் டைபஸ் பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்ட 6 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், இதுகுறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை சாதாரண காய்ச்சலில் 129 பேரும், டெங்குவில் 14 பேரும், சிக்கன்குனியாவால் பாதிக்கப்பட்ட ஒருவரும், ஸ்க்ரப் டைபஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 6 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஸ்க்ரப் டைபஸ் காய்ச்சலால் உயிரிழப்பு ஏற்படாது. இதனால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post விழுப்புரம் மாவட்டத்தில் ஸ்க்ரப் டைபஸ் பாக்டீரியா தொற்றால் 6 பேர் பாதிப்பு appeared first on Dinakaran.